|
|
|
சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன? |
To: Hon'ble Chief Minister Of Tamilnaduதமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்!
சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன? - என்பது குறித்து வலையுலகத் தமிழ்ப் பதிவர்களின் சார்பாக இந்த வேண்டுகோள்/ சில யோசனைகள்!
http://madhavipanthal.blogspot.com/2009/02/chidambaram-what-next.html
இதில் மிக மிக முக்கியமான கோரிக்கை இதோ:
1. (மேல் முறையீடுகளுக்கு முன்னரே) "நந்தனார்" என்னும் திருநாளைப் போவார் நாயனார் சிலையைக் கண்டு பிடித்து, அம்பலவாணரைப் பார்த்தவாறு, முன்பு எங்கு இருந்ததோ, அங்கேயே நந்தனாரை நிறுவிட வேண்டும்! பழைய சிலை கிடைக்கவில்லை என்றாலும் புதிய சிலை ஒன்றினைத் தக்க ஸ்தபதி மூலம் செய்வித்து இதனை உடனே செய்து விடுதல் நலம்!
Feb-23 மகா சிவராத்திரி! - அதற்குள் நந்தனார், நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு இருப்பது தங்களுக்குப் பெரும் சிறப்பல்லவா?
முதல்வர் கலைஞர், இதைத் தன் தனிப்பட்ட பணியாக எடுத்துச் செய்து கொடுத்தால், தில்லைத் தெய்வத் தமிழில், அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் அல்லவா?
இன்னும் சில யோசனைகள் தங்கள் மேலான தமிழ்ப் பார்வைக்கு:
2. திருக்கோயில் ஓதுவார்கள் இனி சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுதல்
3. ஆலய வளாகக் கல்வெட்டு/இதர வரலாற்று ஆதாரங்கள் Digitization
4. தில்லையில் சிறிய அளவிலான தேவாரத் திருமுறைகள் பள்ளி
5. திருவரங்கக் கோயில் ஒழுகு போலவே, தில்லைக் கோயில் ஒழுகு - Code Book
6. தில்லைக் கோயில் குடமுழுக்கு! (22 ஆண்டுகளாக இல்லாமல் இருக்கிறது!)
தங்களுக்கு இருக்கும் பணிச்சுமையினூடே, நந்தனார் சிலைக்கு முன்னுரிமை தந்து,
தமிழ்ப் பக்தி இயக்கம் - திருமுறை இசை வரலாற்றில், தாங்கள் வாழ்வாங்கு வாழ, அடியோங்கள் வேண்டுகிறோம்!
அன்புடன்
தமிழ் வலையுலகப் பதிவர்கள்Sincerely,
The சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன? Petition to Hon'ble Chief Minister Of Tamilnadu was created by Tamil Blogging Community and written by kannabiran, RAVI SHANKAR (KRS) (shravan.ravi@gmail.com). This petition is hosted here at www.PetitionOnline.com as a public service. There is no endorsement of this petition, express or implied, by Artifice, Inc. or our sponsors. For technical support please use our simple Petition Help form.
Send Petition to a Friend - Petition FAQ - Start a Petition - Contributions - Privacy - Media Kit
| PetitionOnline - DesignCommunity - ArchitectureWeek - Great Buildings - Archiplanet - Search | |
| http://www.PetitionOnline.com/Chid2009/petition.html | © 1999-2007 Artifice, Inc. - All Rights Reserved. |